‘ஞானபீட விருதை’ மண்ணிற்கும் மக்களுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன் – கவிஞர் வைரமுத்து!

தமிழ் இலக்கிய உலகில்  உயரிய இடத்தைப் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய படைப்புகளையும் வெளியிட்டு பெரும் புகழைப் பெற்றுள்ளார். இதுவரை அவரது எழுத்தில் 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, திரைப்படத் துறையிலும் அவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள அவர், இதுவரை 7,500க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை உருவாக்கியுள்ளார். திரைப்படப் பாடல்களுக்காக வழங்கப்படும் சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதை வைரமுத்து இதுவரை ஏழு முறை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தமிழ் இலக்கியத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஞானபீட விருது இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் இந்த விருதைப் பெற்றார். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்த உயரிய விருதைப் பெற்றார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மூன்றாவது கவிஞராக வைரமுத்து இந்த ஞானபீட விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ஞானபீட விருதைப் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் கவிதைக்கு இதுவரை ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறையை என் மூலம் நீக்க முடிந்தது என்பது பெருமையாக உள்ளது. இந்த விருதை நான் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன். இந்த விருது கிடைத்ததனால் என் வயது குறைந்தது போல் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இனி என் இலக்கியப் பயணம் புதிய வேகத்துடனும் புதிய பாய்ச்சலுடனும் தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading