விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராகத் திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் நடிகராக “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்” போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
இயக்குனர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவான திரைப்படம் “பிச்சைக்காரன்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான பிச்சைக்காரன் -2 கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது “நூறு சாமி” என்ற புதிய திரைப்படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கும் “நூறு சாமி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
