பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி… வெளியான ‘ஏக் தின்’ பட டிரெய்லர்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை சாய் பல்லவி, தற்போது ‘ஏக் தின்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாக உள்ளார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கான், சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மே மாதம் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டிரைலரில் சாய் பல்லவி மற்றும் ஜூனைத் கான் இடம்பெறும் பல ரொமான்டிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் தயாராகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading