இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா (Made In Korea)’ திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தைப் பற்றிய பல விஷயங்களை இயக்குநர் ரா. கார்த்திக் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலில் அவர் இந்தப் படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்களைப் பற்றி விரிவாக பேசினார்.
அதில், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாக் சார் மிகவும் ஸ்டைலிஷாகவும் சிறப்பாகவும் இருக்கிறார். நமக்கு மிகவும் பிடித்த ‘சிவா’, ‘ரட்சகன்’ போன்ற படங்களில் இருந்த ஒரு தனித்துவமான உணர்வு இந்தப் படத்திலும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அவரை ரசிகர்கள் பல வித்தியாசமான கெட்டப்களில் பார்க்க முடியும் என்றும் கூறினார். இதுகுறித்து அவர் நாகர்ஜுனாவிடம் கூறிய ஒரு அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். “நம்மைவிட அங்கிருந்தே பல சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். நல்ல திரைக்கதை எழுதிய உதவி இயக்குநர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் உங்கள் 100வது படத்திற்காக நான் இங்கிருந்து வந்து இயக்குவது உங்களுக்கு சரியா?” என்று நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன் என்று ரா. கார்த்திக் தெரிவித்தார்.
அதற்கு நாகர்ஜுனா உடனே ‘ஓகே’ என்று சம்மதித்தார் என்றும் அவர் கூறினார். அதுவே அவருடைய சிறப்பு என்றும் இயக்குநர் பாராட்டினார். கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் பல்வேறு முயற்சிகளை செய்து சாதனைகள் படைத்தவர் நாகர்ஜுனா என்றும் அவர் குறிப்பிட்டார். பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு பல தடைகளை உடைத்தவர் என்றும் தெரிவித்தார்.
