Advertisement

நேரடியாக ஓடிடியில் வெளியான பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம்!

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மேட் இன் கொரியா’. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். தனது முந்தைய படத்தின் மூலம் கவனம் பெற்ற ரா. கார்த்திக், இந்த திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதை தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கொரிய கலாசாரத்தின் மீது அதிக ஈர்ப்பும் ஆர்வமும் கொண்ட அந்த பெண், தனது கனவை நிறைவேற்றுவதற்காக தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறாள். அங்கு சென்ற பிறகு அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு சவால்களும் இந்த திரைப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது. முழுவதும் பீல் குட் பாணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் காண கிடைக்கிறது‌.

Add a Comment

Leave a Reply