மார்ச் 12ந் தேதி இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் துரந்தர் 1 திரையரங்குகளில் வெளியாகிறது. உலகளவில் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. இந்தியாவில் மார்ச் 12 இன்று முதல் 250 திரைகளிலும், வெளிநாடுகளில் மார்ச் 13 முதல் 250 திரைகளிலும் திரையிடுகின்றனர். ஸ்பை-ஆக்ஷன் ஜானரில் புதிய மைல்கல்லை படைத்த இந்த திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை தியேட்டரில் கொண்டாடும் அற்புதமான வாய்ப்பை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த முதல் பாகத்தை பார்த்த சில நாட்களிலேயே இதன் இரண்டாம் பாகத்தையும் பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு மகிழலாம். மேலும், துரந்தர் 2 திரைப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சிகள் வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 18 புதன்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடுகின்றனர் .
Add a Comment
