எழுத்தாளர்களை பெரிதாக யாரும் மதிப்பதில்லை – இயக்குனர் தமிழ் ஆதங்கம்!

சிறை படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் தமிழ், தமிழ் சினிமாவை மற்ற இந்திய சினிமாக்கள் திரும்பிப் பார்த்த காலம் சென்று இப்போது நாம் பல்வேறு மொழி சினிமாக்களை திரும்பி பார்க்கிறோம். குறிப்பாக மலையாள சினிமாவை பார்த்து பலரும் பிரமிக்கிறார்கள். காரணம், அங்கு சிறந்த எழுத்தாளர்கள் அதிகமாக உள்ளனர்.இந்தியாவிலேயே அதிகமான எழுத்தாளர்கள் இருப்பது நம் தமிழ்நாடில்தான். ஆனால் நாம் எழுத்தாளர்களை பெரிதாக மதிப்பதில்லை. அவர்களை அழைத்து கதைகள் கேட்பதிலும் குறை உள்ளது. எழுத்தாளர்களை நாம் மதிக்க வேண்டும், சிறந்த கதைகளை திரைப்படமாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading