சன்னி தியோலின் ‘லாகூர் 1947’ படத்தின் டைட்டில் மாற்றமா?

நடிகர் அமீர்கான் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாகூர் 1947’. இந்த படத்தில் நடிகர் சன்னி தியோல் நாயகனாக நடித்துள்ளார். இந்தியாவின் பிரிவினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் முக்கியமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த படத்தில் சன்னி தியோலுடன் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி மற்றும் கரண் டிவோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லாகூர்’ என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரம் என்பதால், இந்தியா–பாகிஸ்தான் இடையே தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ‘லாகூர் 1947’ என்ற தலைப்பு தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என படக்குழு கருதியுள்ளது. இதனால் அந்த தலைப்பை மாற்றி, தற்போது இந்த படத்திற்கு ‘பத்வாரா 1947’ என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘பத்வாரா’ என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading