போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இந்த படத்தை நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில் நடிக்கிறார். சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை அடுத்து தனுஷின் 56வது படத்தை ‘லப்பர் பந்து’ படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ‘ஏஸ், மதராஸி’ படங்களில் நடித்த ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ‘உறியடி’ விஜயகுமார் வில்லனாக நடிக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
