த்ரில்லர் கதைக்களத்தில் நடிக்கும் குமரன் தங்கராஜன்… பூஜையுடன் தொடங்கிய ‘இறுதி பக்கம்’ படப்பிடிப்பு!

பாண்டியன் ஸ்டோர்’ தொடரில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த குமரன் தங்கராஜன், ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமூக ஆர்வலர் ஒருவரின் கொலை பின்னணியை மையமாகக் கொண்டு அந்த படம்  உருவானது. அதேபோல் ஒரு எழுத்தாளர் கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது திரைப்படம் ‘இறுதி பக்கம்’. இந்த படத்தை இயக்கியவர் மனோ வெ. கண்ணதாசன். தற்போது குமரன் தங்கராஜன் மற்றும் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன்  கூடசசந் புதிய திரில்லர் திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.

வழக்கமான பாணியில் அல்லாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ மூலம் பிரபலமான குமரன் தங்கராஜனுக்கு ஜோடியாக நடிகை ஸ்மேகா நடிக்கிறார். திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் கதை நடைபெறுவதால், அங்கேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading