உறியடி விஜயகுமார் – கயல் ஆனந்தி நடிப்பில் தயாராகி வரும்’அறிவு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜயகுமார் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அறிவு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

மோட்டிவ்ட்ரோன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இந்த திரைப்படம், பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் மேக்கிங் காணொளியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading