கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஒரு வலுவான கதை அமைப்புடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சமூக மற்றும் சட்ட சார்ந்த பல அம்சங்கள் வெளிப்படுத்தப்பட உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading