பிரம்மாண்டமான அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா இயக்குனர் அனில் ரவிபுடி?

தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை வழங்கிய இயக்குநராக அனில் ரவிபுடி அறியப்படுகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘சரிலேறு நீக்கெவரு’, ‘எப்2’, ‘எப்3’, ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திக்கி வஸ்துனாம்’, ‘மனா சங்கரா வர பிரசாத் காரு’ உள்ளிட்ட திரைப்படங்கள் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

தற்போது இயக்குநர் அனில் ரவிபுடி, நடிகர் வெங்கடேஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு புதிய முயற்சியாக அனில் ரவிபுடி ஒரு அனிமேஷன் கிராபிக்ஸ் அம்சங்களை கொண்ட பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திரைப்படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading