தனது 40வது திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்யா! #ARYA40

நடிகர் ஆர்யா தற்போது தனது 40வது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த புதிய திரைப்படத்தை இயக்குநர் ஜீவா சங்கர் இயக்குகிறார். இதில் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

ஆர்யா நடிப்பில் சமீப காலமாக வெளியான ‘கேப்டன்’ மற்றும் ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து புதிய கதைகளில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் கோடை கால வெளியீடாக திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக ஜீவா சங்கர் இயக்கும் தனது 40வது திரைப்படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading