ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ’29’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், தற்போது எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘29’. இந்த திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா மற்றும் பிரேம் குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், மதேஷ் மணிக்கம் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ நிறுவனமும், லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரக் காணொளிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading