தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிதி அகர்வால். பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துவரும் அவர், தனது தோற்றம் மற்றும் உடல் மாற்றங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுகுறித்து நிதி அகர்வால் கூறியதாவது, நான் திடீரென உடல் எடை அதிகரித்தது போலத் தோன்றுகிறேன், சில சமயங்களில் திடீரென மிகவும் எடை குறைந்தது போலவும் இருக்கிறேன் என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். உண்மையில் என் உடல் அடிக்கடி மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது.
அந்த மாற்றங்களுக்கு சரியான காரணம் என்ன என்பது என்னாலேயே முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. சில நேரங்களில் என்னுடைய உடலை என்னால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிறது. அந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உருவாகியுள்ளது. அதனால் தற்போது முறையான உடற்பயிற்சிகளையும் கட்டுப்பாட்டான உணவுமுறையையும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
