தென்மாநிலக் கலாச்சாரத்துடன் ஒன்றியிருப்பதாகவே உணர்கிறேன் – நடிகை ஜான்வி கபூர்!

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த அறிமுகம் அவருக்கு தென்னிந்திய திரையுலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. அதன் பின்னர் தற்போது ராம்சரணுடன் ‘பெத்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜான்வி கபூர் தென் மாநிலங்களுடனான தனது உணர்ச்சி பூர்வமான தொடர்பைப் பற்றி மனம்விட்டு பகிர்ந்துள்ளார். 

அதில், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் எனக்கு ஒரு ஆழமான இணைப்பு இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த இடங்களும் அவற்றின் பண்பாடுகளும் எனக்கு புதிதானவை அல்ல, மாறாக, மிகவும் பரிச்சயமான உணர்வை தருகின்றன. அது என் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே நான் கருதுகிறேன். எனக்கு தமிழில் ஓரளவு பேசத் தெரியும். தற்போது தெலுங்கு மொழியையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading