தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.வட சென்னை படத்தின் கதைக்களத்தின் அதே காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகிறது.அதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேடகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.
