3 மணி நேர ரன் டைம் உடன் மோதவுள்ள டாக்சிக் மற்றும் துரந்தர் 2 திரைப்படங்கள்!

இந்தியில் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வெற்றியையும் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘துரந்தர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகம் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ள இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, ‘துரந்தர் 2’ திரைப்படத்தின் முழு நேரம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நீளமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுடன் படம் வெளியாக இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

மற்றொரு புறம், இதே மார்ச் 19ஆம் தேதியன்று இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படமும் பான் இந்திய வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படமும் பல மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளதால், அந்த நாளில் திரையுலகில் பெரிய போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

‘டாக்சிக்’ திரைப்படத்தின் நீளமும் சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் இருக்கும் என அதே வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவு தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆகையால், பெரிய திரை அனுபவத்துடன் வெளியாக உள்ள இந்த இரண்டு படங்களும் மார்ச் 19ஆம் தேதியை மையமாகக் கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading