தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் பிரபல டோலிவுட் நடிகை வைஷ்ணவி சைதன்யா!

தெலுங்கில் வெளியான ‘பேபி’ திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமான நடிகை வைஷ்ணவி சைதன்யா, தற்போது கோலிவுட்டிலும் தனது இடத்தை பிடிக்கத் தயாராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், இப்போது தமிழில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை நடிகைகளில் தனித்துவமான நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்துள்ள வைஷ்ணவி, தமிழில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாக இருப்பது அவரது திரைப் பயணத்தில் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில், வைஷ்ணவியின் இயல்பான நடிப்பு நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்தடுத்த படத் தேர்வுகள் மற்றும் நடிப்பு அவரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading