ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். காதல் கதையில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஐஸ்வர்யா புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது. ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி இந்த புதிய படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு டைட்டில் டீஸருடன் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு ‘டெக்ஸ்லா’ என பெயரிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading