நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மென்டல் மனதில்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாதுரி ஜெயின்!

‘மிஸ் சவுத் இந்தியா 2017’ இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானவர் மாதுரி ஜெயின். மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘பூமிகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதே ஆண்டில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கிய ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் ‘டிரிபிள்ஸ்’ என்ற வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சீதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை அருண் ராமகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதுடன், பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading