சில சமயங்களில் நடிகைகள் கவர்சியாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது – நடிகை டாப்ஸி Open Talk!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படத் துறைகளில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் டாப்சி பன்னு. திருமணத்திற்குப் பிறகும் கதைத்தேர்வில் கவனம் செலுத்தி பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திரையுலகில் தாம் சந்தித்த சில மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், பாலிவுட் சினிமாவில் நடிகைகளின் மார்பக அழகையும், தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் இடை அழகையும் அதிகமாக முன்னிறுத்துகிறார்கள் என்று நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பெண்களை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் பார்க்கும் மனப்பாங்குதான் மிகப் பெரிய பிரச்சினை. எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், நடிகைகளை கவர்ச்சியாகவே காட்ட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. அது எந்த விதமான ஈர்ப்பு என்பதை நான் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தி திரைப்படங்களில் நான் பெரிதாக கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவில்லை. எனவே யாரும் நேரடியாக அப்படிப்பட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. இருந்தாலும், சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் சங்கடத்துடன் கூறிய அனுபவங்கள் உள்ளன. அது எனக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இயக்குநர் கப்பலின் தலைவரைப் போன்றவர். ஆகவே, அவர் கூறும் விஷயங்களை வரம்பு மீறாமல் நடிகைகள் ஏற்று நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. முன்னணி நடிகையாக இருப்பவர் பல்வேறு வகையான நடிப்புகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading