நடிகர் நானி மற்றும் இயக்குனர் சுஜித் கூட்டணியில் உருவாகும் ‘பிளடி ரோமியோ’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘தசரா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் தனது 33வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘தசரா’ திரைப்படத்தில் நடித்தது போல், இந்தப் படத்திலும் நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் வெளியான ‘ஓஜி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, அடுத்ததாக நானி நடிக்கும் புதிய படத்தை இயக்க சுஜித் தயாராகி வருகிறார். இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நானி மற்றும் சுஜித் இணையும் புதிய திரைப்படத்தின் பெயரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த படத்திற்கு ‘பிளடி ரோமியோ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் தொடர்புடைய அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சமையல்காரர் போல வாழும் ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர்கள் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோடை காலத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading