பிரபாஸ் தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் “பௌஜி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். காதல்-ஆக்சன் படமான இதில், பிரபாஸ் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில், இமான்விக்கு பிரபாஸ் சிறப்பு உணவு ஹாம்பரை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த அன்பான செயல் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இமான்வி, பிரபாஸின் பெருந்தன்மை மற்றும் இணை நடிகர்களை மதிக்கும் பண்பை பாராட்டினார்
Add a Comment
