சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி, யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் வேடன். மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில், ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.இதன் மூலம் பிரபலமான இவர், தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நரிவேட்டை’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்திலும் பாடியிருந்தார். இவ்வாறு இசை உலகில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேடன், எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்து திருமண வாழ்க்கைக்குள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
