முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகவும் களமிறங்க முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அவருடைய கதையினை, அவரது உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படத்தினை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
Add a Comment
