இயக்குநர் ராஜ் நிடிமொருவை இரண்டாவது முறையாக த- நடிகை சருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா தற்போது தெலுங்கு திரைப்படமான ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து வருவதோடு அதில் கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக சமந்தா நடித்த ‘ஓ மை பேபி’ திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்த படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமந்தா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கை பற்றியும் தனது எண்ணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். சிறு வயதிலிருந்தே எந்த விஷயமாக இருந்தாலும் அதை சரியாகவும் முழுமையாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் இருந்ததாக அவர் கூறினார். எந்த ஒரு செயலும் திட்டமிட்ட முறையில் நடைபெற வேண்டும் என்பதில் தன்னிடம் எப்போதும் கவனம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை எப்போதும் பாசிட்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேவையற்ற விஷயங்களையும் எதிர்மறையான கருத்துகளையும் தவிர்த்து விடுவதாகவும் சமந்தா கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தேவையற்ற வீடியோக்கள் பதிவிடுபவர்கள் அல்லது நெகடிவாக பேசுபவர்கள் போன்றவர்களை தன்னிடம் இருந்து விலக்கிக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் இணையதளங்களில் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை யாராவது பரப்பினால் அப்படிப்பட்டவர்களை உடனடியாக தடை செய்து விடுவேன் என்றும் சமந்தா கூறியுள்ளார். தன்னுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் கூட தேவையற்ற முறையில் நெகடிவ் நடந்து கொள்வதை தன்னால் ஏற்க முடியாது என்றும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
