ரூ.500 சம்பளம் முதல் தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகை வரை… ஷ்வேதா திவாரி கடந்து வந்த கடினமான பாதை!

அசத்தலான நடிப்பால் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் ஷ்வேதா திவாரி. 44 வயதிலும் முன்னணி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘கசௌட்டி ஜிந்தகி கய்’ தொடரில் அவர் நடித்த ‘ப்ரேர்ணா’ கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிறந்த அவர் இந்த நிலையை அடைவது எளிதான பயணம் அல்ல. பல சவால்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைதான்.

சிறு வயதிலேயே குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற காரணத்தால் ஒரு பயண நிறுவத்தில் மாதம் ரூ.500 சம்பளத்தில் தனது முதல் பணியை தொடங்கினார். அதன் பிறகு 15 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புலகில் அடியெடுத்து வைத்தார். தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்ததும் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஏக்தா கபூரின் பிரபல தொடர் ‘கசௌட்டி ஜிந்தகி கய்’ அவரை ஒரே இரவில் பிரபலமாக மாற்றியது. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அந்த தொடரில் நடித்த அவர், தொலைக்காட்சி ரசிகர்களின் மிகவும் விருப்பமான நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு ‘மேரே டாட் கி துல்ஹன்’, ‘கஹானி கர் கர் கி’, ‘பால் வீர்’ போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்தார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் அவர் வெற்றி பெற்றார். ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வாரத்திற்கு ரூ.5 லட்சம் வருமானம் பெற்றார். தற்போது தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். சமூக வலைதளங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். மாதம் ரூ.500 சம்பளத்தில் தொடங்கிய அவரது பயணம் இன்று மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. தற்போது மும்பையின் காந்திவலி பகுதியில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading