‘தக் லைப்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தைத் தொடர்ந்து, நடிகை திரிஷா தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘விஸ்வாம்பரா’ என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் ‘ராம்’ என்ற படத்திலும் நடித்துக் முடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் அவருடைய முக்கியமான படங்களாக கருதப்படுகின்றன.
இதில் சிரஞ்சீவியுடன் நடித்துள்ள ‘விஸ்வாம்பரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது விஎஃப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அது பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. இந்த நிலையில், ‘விஸ்வாம்பரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு புத்தாண்டான யுகாதி நாளில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த திரைப்படம் வருகிற ஜூலை 10ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
