இங்கிலாந்தில் நடைபெற்ற 79-வது பாப்டா (BAFTA) விருது விழாவில், மணிப்பூரி மொழியில் உருவான ‘பூங்’ (Boong) திரைப்படம் ‘சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்’ விருதை வென்று, பாப்டா விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. “இந்த விருதை என் தாய் மண்ணான மணிப்பூருக்கு சமர்ப்பிக்கிறேன். மிகுந்த சிக்கலில், புறக்கணிக்கப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் கிடைக்காத பகுதியாக மணிப்பூர் தற்போது உள்ளது. இந்த விருது அங்குள்ள மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளியாக இருக்கும்” என்றார்.
Add a Comment
