சமீபத்திய ஒரு பேட்டியில், பாடல் தேர்வில் மிகவும் கவனமாக இருப்பதாக நாக துர்கா தெரிவித்தார். ஒரு பாடலில் நடனமாடுவதற்கு முன் அதன் வரிகளையும் அர்த்தத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வதாகவும், தனக்கு சங்கடமாக இருக்கும் சொற்கள் இருந்தால் மாற்றுமாறு கேட்பதாகவும் கூறினார். மாற்றம் செய்யாத பட்சத்தில் அந்தப் பாடலை நிராகரிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடியிருப்பதாகவும் அது தனது கெரியரில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். ஒரு காலத்தில் 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தால் பெரிய விஷயமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது 50 மில்லியன் பார்வைகள் கூட சாதாரணமாகிவிட்டதாகவும் கூறினார்.
Add a Comment
