தற்போது நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் கதாநாயகியாக களம் இறங்கியுள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‛2018′ என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ‛தொடக்கம்’ என்கிற படத்தில் விஸ்மயா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தொடக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. வரும் ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
