நடிகை ரேக்காவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை – நடிகை ரித்தி குமார்!

இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்தி குமார். சமீபத்தில் இவர் பிரபாஸுடன் ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்திருந்தார்.ஸஅத்திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது கனவு வேடம் குறித்து மனம் திறந்துள்ளார். புகழ்பெற்ற நடிகை ரேக்காவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “புகழ்பெற்ற நடிகை ரேக்காவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவராகவே நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அவரின் ஆன்மாவுடனும் மனதுடனும் எனக்கு ஒரு ஆழமான தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். பலரும் எங்களுக்குள் ஒற்றுமைகள் இருப்பதாக கூறியுள்ளனர். தோற்றத்தை விட அவர்களின் உழைப்பு, மன உறுதி ஆகியவற்றோடு எனக்கு ஒரு இணைப்பு இருக்கிறது. ஒருநாள் இந்த கனவு நனவாகும் என நம்புகிறேன்என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading