தற்போது மீண்டும் டைரக்சனுக்கு திரும்பியுள்ள விஸ்வக் சென், ‛கல்ட்’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கேஜிஎப் புகழ் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரவி பஸ்ரூருக்கு சுமார் 35 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கோல்ட் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார் விஸ்வக் சென். இது போன்ற ஒரு வாட்ச்சை, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் விரும்பி வாங்கியதாகவும் தற்போது அதே போன்ற இன்னொரு வாட்ச்சை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்காக மட்டுமே வாங்கியதாகவும் கூறி தனது அன்பை வெளிப்படுத்தினார் விஸ்வக் சென்.
Add a Comment
