தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் பாடகரும், இசைக்கலைஞரும் கூட. ஏற்கனவே இரு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது ‘மாயம் நீயடி’ என்ற இசை -வீடியோ ஆல்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பாட லுக்கு இசையமைத்ததுடன், அதில் பாடி, ஆடி நடித்திருக்கிறார். விவேக்கின் வரிகளில் சுப்லாக்ஷினி உடன் இணைந்து அவர் பாடியுள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இசைக்கலைஞரான ஹர்ஷவர் தன் தற்போது வெள்ளித்திரைக்கு தாவுகிறார். புதிதாக உருவாகவுள்ள படத்தில் அவர் கதாநா யகனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவும் இருக்கிறது.
Add a Comment
