நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அண்டர் 18’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகிறார்.
அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் தலைப்பை இன்று இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தின் கதை, சமூக அக்கறையுடன் கூடிய உணர்வுபூர்வமான பின்னணியில் அமைகிறது எனக் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான பி.ஜகதீஷ் தயாரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஒசூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
