யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்து வருபவர் யோகி பாபு. அவர் ரஜினிகாந்த், அஜித், விஜய்‌ உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ள அவர், தற்போது பல படங்களில் பிஸியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த இயக்குநர் முன்பு ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்ய சோதனை போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரைப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் படத்தின் தலைப்பு ‘கெணத்த காணோம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியானதையடுத்து இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தலைப்பை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். RP Talkies, Box Office Studio மற்றும் ஜியோ‌ ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading