பிரபல இயக்குநர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் Lee Cronins The Mummy ஆகும். திகில் திரைப்படங்களின் மூலம் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், இந்த முறை ‘தி மம்மி’ கதையை முற்றிலும் புதிய வகையில் திரை உலகிற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் Jack Reynor, Laia Costa, May Calamawy, Natalie Grace மற்றும் Veronica Falcon ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகிலும் அதிரடியும் கலந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் பழமையான சாபம், மர்மமான சூழ்நிலை, பதட்டமான காட்சிகள் மற்றும் அதிரடி நிறைந்த பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
