‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இயக்குனர் ஷங்கரின் திட்டம் என்ன?

‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படங்களின் தோல்விக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் தற்போது ‘வேள்பாரி’ என்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனது கனவு திட்டமாக கருதப்படும் இந்த திரைப்படத்தை, இதுவரை இயக்கிய படங்களை விட மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். கடந்த இரண்டு முயற்சிகளில் தவறவிட்ட வெற்றியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சூர்யாவுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அவை பின்னர் வதந்தியாகவே முடிந்தன.

தற்போது ‘வேள்பாரி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் 55வது திரைப்பட பூஜை விழாவில் ஷங்கர் கலந்து கொண்டதும் கவனம் பெற்றது. மேலும், அந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஆர் டேக் ஸ்டுடியோஸ், ‘வேள்பாரி’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டால், ‘வேள்பாரி’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Is Dhanush acting in ‘Velpaari’? What is director Shankar’s plan?

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading