அபிஷேக் நமா இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜுனைத்குமார் தயாரிப்பிலும், அபே இசையமைப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படத்தின் முன்னோட்டம் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இணைய தளத்தில் மட்டும் இந்த முன்னோட்டம் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சமீப காலமாக ஆன்மிகம் கலந்த திரைப்படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால் இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த திரைப்படம், பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தற்போது கிடைத்துள்ள வரவேற்பு, இந்த படத்தின் வணிக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
