‘பாக்கெட் நாவல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன், அப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து தயாரிக்கின்றன. இதில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு ஏற்கனவே வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply