தந்தை – மகன் பாசத்தைச் சொல்லும் தகப்பன் படத்தின் ‘தங்கப்புள்ள’ பாடல் வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசம், பிரிவால் ஏற்படும் வலி, மகன் மீது தந்தை கொண்டிருக்கும் அளவற்ற அன்பு ஆகிய உணர்வுகளை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களை அருகில் இல்லாமல் தொலைவிலிருந்தே யாருக்கும் தெரியாமல் ரசிப்பதை மையமாகக் கொண்டு உருவான இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

Add a Comment

Leave a Reply