ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, முனிஸ்காந்த், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்த ‘மரகதநாணயம்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ஆக்சிஸ் நிறுவனமும் பேஷன் ஸ்டூடியோவும் இணைந்து ‘மரகதநாணயம் 2’ திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இரண்டாம் பாகத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். முதல் பாகம் போலவே இந்த தொடர்ச்சியும் நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய கற்பனைத் திரைப்படமாக உருவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

