மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள கூஷ்கோர் பண்டட் திரைப்படம் நேரடியாக Netflix தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ள இப்படத்தில், மனோஜ் பாஜ்பாய் ஊழல் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் தலைப்பு குறித்து ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக வடமாநிலங்களில் தலைப்பை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே, இயக்குநர் ரிதேஷ் ஷா மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இப்படத்துக்கு தடை விதிக்க கோரி டில்லி உயர் நீதிமன்றம் முன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பு நிறுவனம் படத்தின் தலைப்பை மாற்ற சம்மதித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் பின்னர் நீதிமன்றம் வழக்கை முடித்து உத்தரவிட்டது. தற்போது படத்தின் பெயர் “கூஷ்ஷோர் போலீஸ்” என மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
