என் மகளுக்கு சுதந்திரமாக பறக்க சிறகுகள் கொடுப்பேன்… நடிகர் ரன்பீர் கபூர் எமோஷனல் டாக்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி மற்றும் மூத்த நடிகராகத் திகழ்ந்த ரிஷி கபூரின் மகனாக பிறந்த ரன்பீர் கபூர், தனது தனித்துவமான நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். குறிப்பாக சமீப காலத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் அவரை மிகப்பெரிய வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டுள்ள ரன்பீர் கபூருக்கு ராஹா என்கிற பெண் குழந்தை உள்ளார். ஆலியா பட்டும் பல்வேறு பேட்டிகளில் தனது கணவர் ரன்பீர் கபூர் ஒரு அன்பான தந்தையாக தங்கள் மகளை எப்படி அக்கறையுடன் கவனித்து வருகிறார் என்பதை பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் தந்தை-மகள் உறவைப் பற்றி மனம் திறந்து பேசிய ரன்பீர் கபூர், “எனக்கும் என் தந்தைக்கும் இடையிலான உறவு சற்றே தூரமாக இருந்தது. அதை நெருக்கமான நட்பாகச் சொல்ல முடியாது. அந்த தலைமுறை இயல்பே அப்படித்தான் இருந்தது. எங்களுக்கிடையில் ஒரு கண்ணாடி சுவர் இருப்பதைப் போல ஒரு இடைவெளி உணர்வு இருந்தது.

ஆனால் இப்போது என் மகளுடன் இருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டது. இன்றைய தலைமுறை அணுகுமுறை மாறுபட்டதாக உள்ளது. நான் அந்த தடுப்பு சுவரை முறியடிக்க விரும்புகிறேன். என் மகளுக்கு ஒரு தந்தையாக மட்டுமல்லாமல், ஒரு நண்பனாகவும் இருக்க விரும்புகிறேன். அவளுக்கு சுதந்திரமான சிறகுகளை அளித்து, அவள் விரும்பும் திசைகளில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading