பொருளாதார சிக்கலில் தவித்த எனக்கு ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் உதவியது – இயக்குனர் கௌதம் மேனன்!

இயக்குநர் கவுதம் மேனன், ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். காதல் கதைகளுக்கு தனித்துவமான மொழியை உருவாக்கிய ‘மின்னலே’ திரைப்படம், வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனுடன், அவரின் இயக்கத்தில் விக்ரம் நடித்தும் நீண்ட நாட்களாக வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் தற்போது வெளியீட்டை நோக்கி மெதுவாக முன்னேறி வருகிறது.

இயக்கத்தில் சற்று குறைவாக செயல்பட்டாலும், சமீப ஆண்டுகளில் ‘விடுதலை’, ‘லியோ’ உள்ளிட்ட சில முக்கியமான மற்றும் பெரிய திரைப்படங்களில் கவுதம் மேனன் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், “பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதிலிருந்து மீண்டு வர ‘லியோ’ திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட யாரும் முன்வராத சூழ்நிலையில், நான் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். தற்போது அந்தப் படத்திற்கு என் பெயரிலேயே சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளேன். இன்னும் சில சிறிய பிரச்சினைகள் மட்டுமே மீதமுள்ளது. அவையும் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading