தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவக்குமார், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த சந்திப்பின் போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அவர் முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சிவக்குமார், விஜய் வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என்றார் . இதனைத்தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் ஓவியக்கலை மற்றும் பாரம்பரிய கலைகள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவக்குமார், “எப்படி பார்த்தாலும், உங்களை விட உங்கள் தாத்தா–பாட்டிகள் பெரியவர்கள் தான். அதுபோல, எத்தனை ஏஐ வந்தாலும், ஒரிஜினலான கலைக்கும் மனித சிருஷ்டிக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
