“தனுஷ் 56” படத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றேன் – நடிகை ப்ரீத்தி முகுந்தன்‌ டாக்!

‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், தொடர்ந்து ‘கண்ணப்பா’, ‘சர்வம் மாயா’, ‘பிளாஸ்ட்’, ‘இதயம் முரளி’, ‘அன்பில் அவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 56-வது படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சிவகங்கையில் நடைபெற்ற படத்தின் பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கத் தேர்வானது குறித்து பேசிய ப்ரீத்தி முகுந்தன், “தனுஷ் 56 படத்திற்காக முறையாக ஆடிஷனில் பங்கேற்றேன். ஒரு படத்தைத் தேர்வு செய்யும்போது இயக்குநர் கதையை விவரிக்கும் விதத்தையும், கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பேன். திரைத்துறையின் ஆரம்பகாலத்தில் சில கதைகளைத் தவறாகத் தேர்வு செய்தேன். அந்த அனுபவங்களின் மூலம் சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொண்டேன்” என்றார்.

மேலும், “ஒரு படத்தில் நடிப்பதற்கான தேர்வில் ஆடிஷன் என்பது இயல்பான நடைமுறை. பல படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகை என்பதற்காக ஆடிஷனில் இருந்து விலக்கு அல்லது சலுகையை எதிர்பார்ப்பதில்லை. தனுஷின் படத்திற்காகவும் ஆடிஷனில் பங்கேற்றுத்தான் தேர்வானேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading