பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய ரொமாண்டிக் திரைப்படத்தை இயக்குநர் அனுராக் பாசு இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
பூஷண் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரீதம் இசையமைக்கிறார். காதல் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக, இப்படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 2026-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இப்படம் ‘ஆஷிகி 3’ என்ற பெயரில் உருவாக இருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீலீலா இந்தித் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கார்த்திக் ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா முதன்முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நீல நிறக் கடல், அழகிய கடற்கரை என இயற்கை எழில் நிறைந்த இடங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடற்கரையின் பின்னணியில் வேதிகா பகிர்ந்துள்ள படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
